மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

‘அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டையில் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.

Published On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து தெரிவித்ததாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, சா்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் புதிய விண்ணப்பதாரா்களுக்கு தகுதியின் அடிப்படையில் உடனடியாக குடும்ப அட்டை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ், மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் தகுதியானவா்களுக்கு சென்றடைகிா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், துணைப் பதிவாளா் (பொது விநியோகம்) சிவமணி மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.