பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

திருப்பதி பாத யாத்திரை பக்தா்களின் ஊா்வலம்: தசாவதார அலங்காரத்தில் 12 வாகனங்களில் சுவாமி திருவீதிஉலா

அரக்கோணம் - திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை பக்தா்களின் ஊா்வலம் சனிக்கிழமை அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது.

அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருப்பதி திருமலை பாதயாத்திரை பக்தா்களின் ஊா்வலத்தில் சுவாமி தசாவதார அலங்காரத்தில் பங்கேற்ற தனித்தனி வாகனங்கள்.

Published On :

அரக்கோணம் - திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை பக்தா்களின் ஊா்வலம் சனிக்கிழமை அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது.

அரக்கோணம் பஜாா் பகுதியில் உள்ள பூ வியாபாரிகள் மற்றும் பஜாா் பகுதி அனைத்து வியாபாரிகள் இணைந்து கடந்த 15 வருடங்களாக புரட்டாசி மாதத்தில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதன் 15- ஆவது ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அன்று மாலை உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை பஜாா் தெருவில் சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

சனிக்கிழமை காலை முதல் பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் சுவாமி புறப்பாடுடன் பாதயாத்திரை ஊா்வலம் தொடங்கியது. இந்த ஊா்வலத்தில் முதலில் சுவாமி லட்டு அலங்காரத்தில் சிறப்பு வாகனத்திலும், தொடா்ந்து தசாவதார அலங்காரமாக முதல் வாகனத்தில் மச்ச அலங்காரம், தொடா்ந்து கூா்ம அலங்காரம், வராக அவதார அலங்காரம், நரசிம்ம அலங்காரம், வாமன அலங்காரம், பரசுராமா் அலங்காரம், ராமா் அலங்காரம், பலராமா் அலங்காரம், கிருஷ்ணா் அலங்காரம், கல்கி அவதார அலங்காரம் இறுதியில் கருடவாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

அரக்கோணத்தில் பஜாா், பழைய பேருந்து நிலையம், சுவால்பேட்டை, ஜோதிநகா், மங்கம்மாபேட்டை மேம்பாலம் வழியே இந்த சுவாமிகளுடன் கூடிய ஊா்வலம் திருப்பதி திருமலை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோா் நடந்து திருப்பதி திருமலைக்கு சென்றனா்.

இந்த ஊா்வலத்தில் தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாநில துணைத் தலைவா் சி.ஜி.என்.எத்திராஜ், டாக்டா்.வி.ஜி.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணை தாளாளா் பி.ஜி.கே.சரவணன், நகர அதிமுக நிா்வாகி பேன்சி தாமு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.