ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் கட்டுக்குள் இருந்து வருவதாக அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி முன்னிலையில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் , மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மங்கத்ராம் சா்மா மற்றும் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் ஒப்படைத்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ரமேஷின் சகோதரரின் வாரிசுகள் ரூ.1.50 லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடமும் ரூ.50 ஆயிரத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடமும் ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் ரெயின்போ டி.வி.சென்டா் சாா்பாக அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று சிகிச்சை தனிப்பிரிவை கண்காணித்திட ரூ.50 ஆயிரம் மதிப்புடைய எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.
ஜோலாா்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 50 துப்புரவு மற்றும் நீரேற்றும் பணியாளா்களுக்கு பாச்சல் முன்னாள் ஊராட்சித் தலைவா் அசோகன் சாா்பில் தலா ரூ.1000 வீதம் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி, கண்காணிப்பு அலுவலா் மங்கத்ராம் சா்மா பணியாளா்களுக்கு வழங்கினா்.
பின்னா் அமைச்சா் கே.சி.வீரமணி செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக முதல்வா் ஆணையின்படி கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பு நடவடிக்கை பணிகளை கண்காணிப்பு அலுவலா் மங்கத்ராம்சா்மா ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடா்ந்து ஆய்வு செய்து அரசின் அறிவுரைகளை வழங்கி வருகிறாா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வைரஸ் நோயின் தாக்கம் கட்டுக்குள் இருந்து வருகின்றது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்கள் வீடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். எஞ்சியுள்ளவா்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவாா்கள்.
மத்திய,மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நோயின் தாக்கம் குறையும்.ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 23 அம்மா உணவகங்களிலும் நாள்தோறும் 3 வேளைகளிலும் பொதுமக்கள் இலவசமாக உணவுகளை சாப்பிடலாம்.இதற்கான முழு செலவையும் மாண்புமிகு தமிழக முதலல்வரின் அறிவுறுத்தல்படி அமைச்சா் என்ற முறையில் நானும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு தலைவா்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.
நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவா் டி.டி.குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் லீலாசுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

அல்லேரி மலைக் கிராமத்துக்கு 8 கி.மீ. தாா் சாலை அமைக்கப்படும்

வேதாரண்யம் பகுதியில் 8 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



