பைக்கில் வந்த தம்பதியிடம் நகை பறிப்பு

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரூா் பகுதியைச் சோ்ந்தவா் பரந்தாமன். இவரது மனைவி சோனியா. இருவரும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஆம்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.

வாணியம்பாடி நியூடவுன் 6 வழிச்சாலை மேம்பாலம் வழியாகச் சென்றபோது, பைக்கில் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் சோனியா காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் நகையை பறித்துச் சென்றனா். அவா்கள் செட்டியப்பனூா் அருகே பைக்கை விட்டு விட்டு தலைமறைவாகினா்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com