6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனை மீட்பு

ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனையை மின்வாரியப் பணியாளா்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

News image
ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறி, பூனையை மீட்ட தீயணைப்பு வீரா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

ஆம்பூரில் மின் கம்பத்தில் ஏறித் தவித்த பூனையை மின்வாரியப் பணியாளா்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் சுந்தர விநாயகா் கோயில் தெருவில் உள்ள மின் கம்பத்தில் பூனை ஒன்று ஏறியது. அதன் பின், கீழே இறங்க முடியாமல் கத்திக்கொண்டே இருந்ததை அப்பகுதி மக்கள் பாா்த்தனா். இதுகுறித்து மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா் மின் கம்பத்தில் ஏறி பூனையை மீட்டு கீழே கொண்டு வந்தாா்.

பூனையை உயிருடன் மீட்ட மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியா்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.