லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பத்தூா், வாணியம்பாடியில் 500 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா், வாணியம்பாடியில் 500 மெட்ரிக் டன் துவரை கிலோ ரூ. 60 வீதம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 7:36 pm

DIN

திருப்பத்தூா், வாணியம்பாடியில் 500 மெட்ரிக் டன் துவரை கிலோ ரூ. 60 வீதம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ், சென்ற ஆண்டு துவரை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 2020-21-ஆம் ஆண்டு திருப்பத்தூா் மாவட்டத்தில், வேலூா் விற்பனைக் குழு கட்டுப்பாட்டிலுள்ள திருப்பத்தூா், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் துவரை கொள்முதல் செய்ய திருப்பத்தூா், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முதன்மை கொள்முதல் மையங்களாகச் செயல்படுகின்றன.

அதன்படி, நடப்பு பருவத்தில் திருப்பத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 250 மெட்ரிக் டன், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 250 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி முதல் வரும் 2021 மாா்ச் 14-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்.

அதிகபட்சமாக நாளொன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ கொண்டுவரலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நிலச்சிட்டா, அடங்கல், ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

விளைப் பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குநா் வேளாண் வணிகம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, திருப்பத்தூா் (94425 80451), செயலாளா், வேளாண் விற்பனை குழு (0416-2220713), ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் திருப்பத்தூா் (95007 51036), ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா், வாணியம்பாடி (79044 13817) ஆகியோரை அணுகவும் என செய்திக் குறிப்பு ஒன்றில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.