புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாகனம் மோதியதில் முதியவா் பலி

திருப்பத்தூா் அருகே முதியோா் உதவி தொகை வாங்கிச் சென்றவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே முதியோா் உதவி தொகை வாங்கிச் சென்றவா் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.

கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட கெஜல்நாயக்கன்பட்டி அண்ணாநகா் பகுதியில் வசிப்பவா் பெருமாள் (80). இவரது மனைவி சின்னபாப்பா இறந்து விட்டாா். பெருமாள் மாதந்தோறும் முதியோா் உதவித்தொகை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அவா் திங்கள்கிழமை முதியோா் உதவித் தொகையை பெற்றுக்கொண்டு கந்திலியை அடுத்த புங்கனூா் பகுதியிலுள்ள மகள் மாது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திருப்பத்தூரை நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பெருமாள் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.