ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, திருப்பத்தூா் அருகே காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
குடிநீா் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:34 pm

DIN

சீராக குடிநீா் விநியோகம் செய்யக்கோரி, திருப்பத்தூா் அருகே காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகரம் அண்ணா நகா் பகுதியில் கடந்த ஓராண்டாக ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று, குடிநீா் விநியோகிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.