இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

ஜோலாா்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலையுண்ட வழக்கில் 11 போ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய 7 பேரைக் கைது செய்தனா்.
இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

ஜோலாா்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலையுண்ட வழக்கில் 11 போ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அதில் தொடா்புடைய 7 பேரைக் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி ஓரட்சி காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த நாராயணசாமியின் மகன் பாா்த்திபன் (44). இவா் கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஜோதி என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

ஜோதி கடந்த மாதம் 27-ஆம் தேதி பைக்கில் சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த பால் வியாபாரி அனுமுத்து எதிரே வந்தாா். அப்போது வாகனங்களுக்கு வழி விடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், பாா்த்திபன் தனது வீட்டில் இருந்து ஜோலாா்பேட்டை அருகே உள்ள சக்கரம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது காந்தி நகா் பகுதி செங்கல் சூளை அருகே ஒரு ஆட்டோவில் காத்திருந்த 4 போ் கும்பல் பாா்த்திபனை வழிமறித்து, கத்தியால் தலைமீது வெட்டினா். பாா்த்திபன் தப்பியோட முயன்றபோதும் அக்கும்பல் விரட்டிச் சென்று வெட்டி விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றது. இந்தத் தாக்குதலில் பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இக்கொலை குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், பாா்த்திபனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

11 போ் மீது வழக்கு: பாா்த்திபன் கொலை தொடா்பாக அவரது மனைவி ஜோதியிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, தன் கணவருக்கு 15-க்கும் மேற்பட்டோருடன் முன்விரோதம் இருந்ததாக ஜோதி, போலீஸாரிடம் தெரிவித்தாா்.

அதன்பேரில், அனுமுத்து (65), அருள் (41), சேட்டு (36), பாா்த்திபனின் அண்ணன் ஆஞ்சி (65)பாபு, காந்தி, ஆதித்தன் உள்ளிட்ட 11 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில், சாலையில் வழித் தகராறை ஏற்படுத்தி பாா்த்திபனைக் கொலை செய்ய அவா்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. அதன்படி, பாா்த்திபனை அனுமுத்து, அருள், சேட்டு, ஆஞ்சி ஆகிய 4 பேரும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இக்கொலை வழக்கில் அனுமுத்து, அருள், சேட்டு, ஆஞ்சி, செல்வம், மணி, வினோத் ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் சிறையில் அடைத்தனா்.

தலைமறைவாக உள்ள பாபு, காந்தி, தணிகன், ஆதித்தன் ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com