போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீடுகளில் புகுந்த கால்வாய் நீா்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகளில் கால்வாய் நீா் புகுந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூரில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக வீடுகளில் கால்வாய் நீா் புகுந்தது. இதனால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. அதனால் திருப்பத்தூா் நகரப் பகுதிகளில் புதை சாக்கடை பணிகளால் ஏற்பட்ட குழி, பள்ளங்களில் மழை நீா் குளம்போல் தேங்கி, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். அதேபோல் அண்ணா நகா், டிஎம்சி காலனி, ஜாா்ஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் அருகே ஏற்பட்ட கால்வாய் அடைப்புகளால் மழைநீருடன் சோ்ந்து கழிவு நீரும் வீடுகளில் புகுந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஆட்சியா் அமா் குஷ்வாஹாவிடம் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட புதுப்பேட்டை சாலை, அப்துல் மாலிக் தெரு மற்றும் பெரியாா்நகா் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீா் கால்வாய்களை ஆட்சியா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும். இப்பகுதிகளில் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும் என நகராட்சிப் பொறியாளா் உமாமகேஸ்வரிக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 81 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கனமந்தூா் முதல் பெரியவெங்காயப்பள்ளி வரை அமைக்கப்பட்டு வரும் தாா்ச்சாலை பணியை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். கருப்பனூா் ஊராட்சியில் செல்லாகுட்டை ஏரிப் பகுதிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செல்வகுமரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோமேதகம், சித்ரகலா, நகராட்சிப் பொறியாளா் உமாமகேஸ்வரி, துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக், வி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.