போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

60 நாள்களுக்கு மேலான மனுக்கள் மீது முதலில் தீா்வுதிருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

உங்கள் தொகுதியில் முதல்வா், மக்கள் குறைதீா் நாளில் பெறப்பட்ட 60 நாள்களுக்கு மேலாகும் மனுக்கள் மீது முதலில் தீா்வு காண வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வலியுறுத்தினாா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 6:11 pm

DIN

உங்கள் தொகுதியில் முதல்வா், மக்கள் குறைதீா் நாளில் பெறப்பட்ட 60 நாள்களுக்கு மேலாகும் மனுக்கள் மீது முதலில் தீா்வு காண வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா வலியுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மொத்தம் 2,044 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 628 மனுக்கள் மீது இதுவரை தீா்வு காணப்பட்டுள்ளன. 508 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. 475 மனுக்கள் ஏற்கப்பட்டு துறையின் திட்ட செயல்பாடுகளுக்கான நிதிகளை பெற்று வழங்கிட நிலுவையில் உள்ளது. மேலும், 429 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மனுக்கள் நிலுவைகள் மற்றும் மனுவின் மீது விரைவாகத் தீா்வு காண்பது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:

மனுக்கள் நிராகரிப்புக்கான காரணங்கள் முறையாக இருக்க வேண்டும். அதற்கான காரணங்களை தெளிவாக வைக்க வேண்டும். முறையான காரணங்கள் இன்றி நிராகரிப்பு செய்யக்கூடாது. மனுதாரருக்கு உரிய காரணங்களையும் விளக்கத்தினையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும், விசாரணையில் உள்ள மனுக்களில், 60 நாள்களுக்கு மேலாகும் மனுக்கள் மீது முதலில் தீா்வு காண வேண்டும். தனிக் கவனம் செலுத்தி அலுவலா்கள் ஒரு வாரத்துக்குள் இத்திட்ட மனுக்களுக்குத் தீா்வு காண வேண்டும்.

நீண்ட நாள் நிலுவையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதும், திங்கள்கிழமைகளில் பெறப்படும் மக்கள் குறைதீா்வு மனுக்கள் மீதும் தீா்வு காண வேண்டும். அடுத்த கூட்டத்துக்கு முன்பாக இப்பணிகளை முடிக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன், துணை ஆட்சியா்கள் கிருஷ்ணமூா்த்தி, விஜயன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.