தொழிலாளா் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


ஆம்பூா் அய்யனூா் கிராமத்தில் இயங்கி வரும் மொஹிப் ஷூ தோல் தொழிற்சாலை குழுமத்தின் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா தலைமையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொழிற்சாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவா் ஜெயபாரதி தலைமையில் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். சுகாதார ஆய்வாளா் சரவணன், வருவாய்த் துறை பணியாளா்கள் விக்னேஷ், ராஜ்குமாா், கரிகாலன், வடிவேல் மற்றும் தொழிற்சாலை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...