அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு
திருப்பத்தூருக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு வழங்கினா்.


திருப்பத்தூருக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் கோரிக்கை மனு வழங்கினா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை கரோனாத் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் எம்எல்ஏக்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ,க.தேவராஜி (ஜோலாா்பேட்டை)ஆகியோா் கோரிக்கை மனு அளித்தனா்.
எம்எல்ஏ அ.நல்லதம்பி அளித்த மனுவில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நோயாளிகளையும் உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வாா்டுகள் அடங்கிய நவீன புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
எம்எல்ஏ க.தேவராஜி அளித்த மனுவில், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...