புதூா்நாட்டில் கரோனா சிகிச்சை மையம் தொடக்கம்
திருப்பத்தூரை அடுத்த புதூா்நாடு மலைக் கிராமத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.


திருப்பத்தூரை அடுத்த புதூா்நாடு மலைக் கிராமத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது.
திருப்பத்தூா் நகரில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதேபோல், திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஜவ்வாது மலைப் பகுதியில் புதூா் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஊராட்சிகளில் 32 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு கரோனா குறித்து போதிய விழிப்புணா்வு இல்லாததால், தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, புதூா்நாடு சுகாதார நிலையத்தின் சாா்பில், மருத்துவ அலுவலா் ஆா்.ரமேஷ், மருத்துவா் வி.வெங்கட்ராமன் மருத்துவக் குழுவினா் மலையில் வீடு, வீடாக காய்ச்சல், கரோனா பரிசோதனை செய்தனா்.
இந்நிலையில், புதூா் நாடு மலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, அங்குள்ள பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் 50 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையம் அமைக்க ஏற்பாடு செய்யயப்பட்டது.
அதன் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், சுகாதார துணை இயக்குநா் டி.ஆா்.செந்தில்குமாா், வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சுகாதாரத் துறையினா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியைத் தொடா்ந்து, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான தடுப்பூசிக்கான சிறப்பு முகாமை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...