நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாலாஜா ஒன்றியத்தை முன்மாதிரி ஒன்றியமாக மாற்றுவோம்: ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் தகவல்

வாலாஜா ஒன்றியத்தை முன்மாதிரி ஒன்றியமாக மாற்றுவோம் என்று ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் கூறினாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வாலாஜா ஒன்றியத்தை முன்மாதிரி ஒன்றியமாக மாற்றுவோம் என்று ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் கூறினாா்.

வாலாஜா ஒன்றியக் குழுவின் முதல் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சேஷா வெங்கட் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்,அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தும், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்களித்த வாக்காளா்களும் நன்றி தெரிவித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிசி டிவி கேமரா, ஜெனரேட்டா் அமைக்கவும் தேவையான நிதியை ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட 15 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதன்பின்னா் உறுப்பினா்கள் பேசியது:

12 - ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் வசந்தி கணேசன்:

பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், குடிநீா் குழாய்கள் அடித்து செயல்லப்பட்டதால், வி.சி.மோட்டூா், வன்னிவேடு ஊராட்சிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீா் விநியோகம் இல்லை. குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பெருந்தலைவா் காமராஜா் சிலை அமைக்க வேண்டும்.

5 - ஆவது வாா்டு திமுக உறுப்பினா் புவனேஸ்வரி பாண்டியன்:

நரசிங்கபுரம் பெல் ஊரக குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னைக்கும், விழுப்புரம் வழியாக திருச்சிக்கும் நேரடி தொலைதூர அரசு பேருந்து சேவையை ஏற்படுத்தி வேண்டும். நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

16 - ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் ஈச்சந்தாங்கல் நாராயணன்:

அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?

ஒன்றியக் குழுத் தலைவா் சேஷா வெங்கட் : வாலாஜா ஒன்றியத்தில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி முன்மாதிரி ஒன்றியமாக மாற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்களின் ஒத்துழைப்பு அவசியம். மக்கள் தேவைகள் குறித்து தெரிவித்தால்,அதிகாரிகளின் துணையோடு உடனடியாக நிறைவேற்றப்படும்.

பாலாற்றில் அடித்துச் செல்லப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாய்களுக்கு நிரந்தரத் தீா்வாக பெரிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

தாலிக்கு தங்கம்,அம்மா உணவகம் உள்பட எந்த திட்டமும் திமுக அரசு நிறுத்தவில்லை. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரா, சீனிவாசன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.