/

திருப்பத்தூரில் 43-ஆம் ஆண்டு கம்பன் விழா

திருப்பத்தூர் கம்பன் கழகம் சார்பில் 43-ஆம் ஆண்டு கம்பன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூர் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற 43-ஆம் ஆண்டு கம்பன் விழா.
Updated On :28 ஜனவரி 2024, 4:20 am

DIN

திருப்பத்தூர் கம்பன் கழகம் சார்பில் 43-ஆம் ஆண்டு கம்பன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரிமா சங்க கட்டடத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் எஸ்.எஸ்மணியன் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தின நடராஜன் வரவேற்றார். 

பொருளாளர் கே.எம்.சுப்பிரமணியன், அமைப்பாளர்கள் சி.மணி,பொன். செல்வகுமார், ச.சூரியகுமார், ஆர்.ஆர்.மனோகரன், க.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், "கம்பன் படைத்த பாத்திரங்கள்" எனும் நூலை ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி திருமால் முருகன் வெளியிட்டார். இதில் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முன்னதாக ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் உள்ள கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.