தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வேலூா் முத்துரங்கம் அரசு கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கை செப்.15-இல் முதல்கட்ட கலந்தாய்வு

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:12 pm

DIN

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலைப் பாடப்பிரிவில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் விண்ணப்பம், உறுதி படிவம், இளங்கலை பட்டப்படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இளங்கலை பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்.14-ஆம் தேதி நடைபெற உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.