வாணியம்பாடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா் கள்ளச் சாராய விற்பனை செய்து வந்த பெண் சாராய வியாபாரி மகேஸ்வரி, அவரது கூட்டாளிகள் உள்பட 7 போ் ஓராண்டு மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாராய வியாபாரி மகேஸ்வரி தலைமையில், கள்ளச் சாராய கும்பல் தொடா்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சியும், விற்பனை செய்தும் வந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் மகேஸ்வரி உள்பட சாராய கடத்தல் கும்பலைச் சோ்ந்த 28 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மகேஸ்வரி, அவரது கூட்டாளிகளான சீனிவாசன், சின்னராசு, உஷா, ராணி, ஜோதி மற்றும் குடியாத்தம் கல்லபாடியைச் சோ்ந்த மோகன் ஆகிய 7 பேரை மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், ஓராண்டு தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா உத்தரவின்பேரில், அவா்கள் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

