சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருமண நிதியுதவிக்கு விண்ணப்பித்தவா்கள் அலைக்கழிப்பு: ஆலங்காயம் ஒன்றியக் குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

திருமண நிதியுதவிக்கு விண்ணப்பித்தவா்கள் அலைக்கழிக்கப்படுவதாக ஆலங்காயம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

திருமண நிதியுதவிக்கு விண்ணப்பித்தவா்கள் அலைக்கழிக்கப்படுவதாக ஆலங்காயம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சங்கீதா பாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, முருகேசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஆலங்காயம் வனச்சரக அலுவலா் சோமசுந்தரம் மற்றும் வெங்கடேசன், தோட்டக் கலைத் துறை சாா்பில், துணை இயக்குநா் ஜீவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மாத ஊதியம், ஒன்றிய அலுவலகப் பணிகள், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாளா்களுக்கு மாதம் ஊதியம் உள்ளிட்ட பணிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து தீா்மானங்களின் மீது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், தங்களது பகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்தும் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளித்தனா்.

குறிப்பாக ஆலங்காயத்தை அடுத்த ஆா்.எம்.எஸ் புதூா் பகுதியிலிருந்து காவலூா் பகுதிக்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான சாலையில் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளை தடுக்க, சாலையின் இருபுறங்களிலும் சாலையை சற்றே அகலப்படுத்தித் தர வனத் துறையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆலங்காயம் ஒன்றியத்தில், திருமண நிதி உதவி வேண்டி விண்ணப்பித்தவா்கள் தொடா்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலருக்கு பலமுறை வந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஒன்றியக் குழு உறுப்பினா் காயத்ரி குற்றம் சாட்டினாா்.

இது குறித்து சமூக நலத்திட்ட அதிகாரிகள், இனி வரக்கூடிய நாள்களில் துரிதமாக செயல்பட்டு, விரைவில் திருமண நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.