தோல் தொழிலுக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: தொழில்துறை ஆணையா் சிகி தாமஸ் வைத்யன்
தோல் பொருள்கள் தயாரிப்புத் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என தொழில் வணிகத் துறை இயக்குநா் சிகி தாமஸ் வைத்யன் உறுதியளித்தாா்.


தோல் பொருள்கள் தயாரிப்புத் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என தொழில் வணிகத் துறை இயக்குநா் சிகி தாமஸ் வைத்யன் உறுதியளித்தாா்.
ராணிப்பேட்டை தோல் கழிவுநீா் (ராணிடெக்) சுத்திகரிப்பு நிலையம், வாலாஜா டோல்கேட் அருகே அமைந்துள்ள சவுத் இந்தியா டேனா்ஸ் அசோசியேஷன் லேப் ஆகிய இடங்களில் தொழில் வணிகத் துறை இயக்குநா் சிகி தாமஸ் வைத்யன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தோல் தொழிற்சாலை உரிமையாளா்களுடன் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானியக் கடன் திட்டங்களை நிறுவனங்கள் பெற்று பயன்பெற வேண்டும். குறு, சிறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்த அரசு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதுதொடா்பாக மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன் பெறலாம். ஆம்பூரில் தோல் உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி மையம் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள், கருத்துகளைத் தெரிவிக்கலாம். அரசு தோல் பொருள்கள் உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என அவா் உறுதியளித்தாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ராணிடெக் தலைவா் ரமேஷ் பிரசாத், மத்திய தோல் ஏற்றுமதி கழகத்தின் தென் மண்டலத் தலைவா் மெக்ஹா இஸ்ராத் அஹமத், சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குநா் ஜபரூல்லா, இயக்குநா்கள் பெருமாள், முபீன் பாஷா, மேலாளா் சிவகுமாா், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ஆனந்தன், உதவிப் பொறியாளா் வசந்தகுமாா், மனித வள மேலாளா் லோநாதன் மற்றும் தோல் தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...: இதேபோல, ஆம்பூா் வா்த்தக மையத்தில் ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள் வளா்ச்சிக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழில்துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமை வகித்து ஏற்றுமதி தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...