பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக புகார்

வாணியம்பாடி அருகே பாலாற்றில் தோல் கழிவுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கலப்பதாக புகார்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றில் தோல் கழிவுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது.

மேலும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், அனைத்தையும் தாண்டி பாலாற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த சூழலை பயன்படுத்தி, வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலை நிர்வாகம் கழிவுகளை பாலாற்றில் திறந்துவிட்டுள்ளனர். இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ், தண்ணீரில் அதிகளவில் நுரை பொங்கியிருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாலாற்று படுகை விவசாயிகள், வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்த நிலையில், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நுரை பொங்குவதை தடுக்க தோல் தொழிற்சாலை நிர்வாகத்தினர், சில மருந்துகளை பாலாற்று பாலத்தின் ஓரம் தெளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com