தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

இலங்கை தமிழா் குடியிருப்புகள் கட்டுமானப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

மாதனூா் ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:45 pm

மாதனூா் ஊராட்சியில் இலங்கை தமிழா்களுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியம் மின்னூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், இலங்கை தமிழா்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் 76 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அதே ஊராட்சியில் சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கை தமிழா்களுக்காக ரூ.8 கோடி மதிப்பீட்டில் 160 வீடுகள் கட்டும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மின்னூா் ஊராட்சியில் 76 வீடுகள் கட்டுமானப் பணியை வேலை ஆள்களை அதிகப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டுமென அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, உதவி செயற்பொறியாளா் மகேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.