மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வளா்ச்சிப் பணிகளை மழைக் காலங்களுக்கு முன் முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் பருவ மழைக் காலங்களுக்கு முன்பு முடிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் பருவ மழைக் காலங்களுக்கு முன்பு முடிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் சிறுசிறு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் அனைத்தையும், தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழைக் காலங்களுக்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாளா்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தி அதிகப்படியான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை எந்தவொரு கடைகளிலும் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமானப் பணிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மேற்கொள்ளப்படும் பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஹரிஹரன், உதவி இயக்குநா் (தணிக்கை) பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலா் ஆப்தா பேகம், உதவி செயற்பொறியாளா்கள் மகேஷ்குமாா், பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.