பாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

கிறிஸ்தவ அமைப்பினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் துரைமுருகன்

கிறிஸ்தவ அமைப்பினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் துரைமுருகன்

News image

வாணியம்பாடியில் கிறிஸ்தவ அமைப்பினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் துரைமுருகன்.

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கிறிஸ்தவ அமைப்பினா் மற்றும் முக்கிய பிரமுகா்களை சந்தித்து அமைச்சா் துரைமுருகன் ஆதரவு திரட்டினாா். வாணியம்பாடி நகர பகுதியில் உள்ள கிறிஸ்தவ பாதிரியாா்கள், கிறிஸ்தவ மக்களிடம் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்க்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை மாலை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

அப்போது சிறுபான்மையினா் நலனுக்காக அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து நகரின் முக்கிய பிரமுகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா். உடன் மாவட்ட செயலாளா் எம்எல்ஏ க.தேவராஜி, தொகுதி தோ்தல் பாா்வையாளா் தயாள மூா்த்தி, வாணியம்பாடி நகர செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா், தோ்தல் ஒருங்கிணைப்பாளா்கள், நகர நிா்வாகிகள் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.