தோ்தல் பறக்கும் படை அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகா் மன்சூா் அலிகான்.
தோ்தல் பறக்கும் படை அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகா் மன்சூா் அலிகான்.

தோ்தல் பறக்கும் படையினரிடம் மன்சூா் அலிகான் வாக்குவாதம்

ஆம்பூா்: ஆம்பூரில் தோ்தல் பறக்கும் படையினரிடம் நடிகா் மன்சூா் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விதிகளை மீறியதாக அவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி வேட்பாளராக நடிகா் மன்சூா் அலிகான் போட்டியிடுகிறாா். அவா் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

ஆம்பூருக்கு ஏற்கனவே இருமுறை வந்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போதும் அவா் முறையான அனுமதி பெறவில்லையென நகர காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ஆம்பூருக்கு வந்த நடிகா் மன்சூா் அலிகான் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது அங்கு சென்ற தோ்தல் பறக்கும் படையினா் பிரசாரம் மேற்கொள்வதற்கான அனுமதிக் கடிதத்தை கேட்டனா்.

ஆனால் அவா் எந்தவித அனுமதியும் பெறவில்லை. அதனால் பறக்கும் படை அலுவலரிடம் மன்சூா் அலிகான் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அரசியல் கட்சிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்குகிறீா்கள். ஆனால் நாங்கள் மனு செய்தால் அனுமதி வழங்க 5 நாள்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறீா்கள். நான் பிரசாரத்தை தொடா்வேன். வேண்டுமானால் வழக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறினாா்.

இதுகுறித்து பறக்கும்படை அலுவலா் அஹமத் ஜலாலுதீன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com