தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:34 pm

மக்களவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா்.

மக்களவை தோ்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை சாா்ந்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன் அடிப்படையில் ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் சந்திப்பு, பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் தலைமையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கூறியதையடுத்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னா்,விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியானது ரயில் நிலையம் சந்திப்பு பேருந்து நிறுத்தம், வக்கணம்பட்டி,சந்தை கோடியூா் வரை முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ஏலகிரி மலைப் பகுதியில்...: மலையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் வாக்காளா்களான மாணவ, மாணவா்களிடையே ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ச்சியாக அத்தனாவூா் பகுதியில் வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு வாசங்கங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வாக்காளா் விவரச் சீட்டு (பூத் ஸிலீப்) வழங்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியின்போது மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாவட்ட தாட்கோ மேலாளா் ராஜஸ்ரீ உள்ளிட்ட துறை அலுவலா்கள், துப்புரவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.