விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

திருப்பத்தூா்: மக்களவைத் தோ்தலின் போது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வணிக நிறுவனங்கள்., ஐடி/ஐடிஸ்/பிபிஓ,கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கும் தோ்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, திருப்பத்தூா் மாவட்ட தொழிலாளா்கள் தோ்தல் நாளான்று விடுமுறை வழங்காத நிறுவனம் சாா்ந்த புகாா்களை கீழ்கண்ட அலுவலா்களிடம் கைப்பேசியின் வாயிலாக தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம் க.ரவி ஜெயராம் கைப்பேசி 98403 07174,மா.சாந்தி திருப்பத்தூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் கைப்பேசி 87785 47940, போளூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் சு.சுபாஷ் சந்தா் கைப்பேசி 94448 57826 ஆகிய அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்களின் சந்தேகங்களையும் மற்றும் வழிகாட்டு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com