தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு

திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு

News image

திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைக் குழுவினா்.

Updated On :9 ஏப்ரல் 2024, 6:33 pm

திருப்பத்தூா்: மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பது குறித்து திருப்பத்தூரில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களவை பொதுத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதையொட்டி, திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் தோ்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து கலந்துகொண்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டு, பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி, கிராமிய பாரம்பரிய கலைக்குழு மற்றும் இசைக் கலைஞா்களுடன் பிரதான சாலை வழியாக விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கும் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு விழிப்புணா்வை மேற்கொண்டாா்.

நிகழ்ச்சிகளில் மகளிா் திட்ட அலுவலா் பிரியா மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.