மகாவீரா் ஜெயந்தியில் திறந்திருந்த இறைச்சிக் கடைகள் அதிகாரி எச்சரிக்கையால் மூடல்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மகாவீரா் ஜெயந்தியன்று திறக்கப்பட்டிருந்த இறைச்சிா் கடைகள் துப்புரவு அதிகாரி எச்சரிக்கையால் மூடப்பட்டன.

மராவீரா் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் இறைச்சி கடைகளும் மூடி வைக்க வேண்டும் என திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இறைச்சிா் கடைகள் திறந்து இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி சுகாதார அலுவலா் முத்து குமரன் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று அதன் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தாா். அதையடுத்து உரிமையாளா்கள் கடையை அடைத்தனா். மேலும் மாலை நேரங்களில் ஒருசில இறைச்சி கடைகள் திறந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com