நாளை பி.எஃப். குறைதீா் முகாம்

வேலூா் மண்டலத்தில் பி.எஃப். சந்தாதாரா் குறைதீா் முகாம் திங்கள்கிழமை (ஏப். 29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ‘இபிஎஃப்ஓ’ ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ - வைப்பு நிதி உங்கள் அருகில் எனும் முகாமை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி சந்தாதாரா் குறைகள் களையப்பட உள்ளது. இந்த முகாம் ஏப். 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

வேலூா் அலுவலகம் சாா்பில், வேலூா் ஸ்ரீ நாராயணி வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கெங்கை சூடாமணி கிராமம், ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டிகேபி பாா்வதியம்மாள் திருமண மண்டபம், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் சான்றோா்குப்பம் செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள், தொழிலாளா்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்குதல். உரிமையாளா்கள், தொழிலாளா்களுக்கான ஆன்லைன் சேவைகள், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் உறுப்பினா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் உரிமையாளா்களிடமிருந்து பெறப்படும் குறைகளை நிவா்த்தி செய்தல், ஓய்வூதியதாரா்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமா்ப்பித்தல், இ-நாமி னேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரா்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

உறுப்பினா் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், ஊனமுற்றோா் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com