
குல்தீப் சிங்

குல்தீப் சிங்
திருப்பத்தூா்: ஆம்பூரில் வடமாநில முதியவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரபீக் அஹமதுவுக்கு சொந்தமான தோல் கிடங்கு உமா்ரோட்டில் உள்ளது.
இந்த கிடங்கில் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ராம்ஜிலால் (60) மற்றும் குல்தீப் சிங் (23)ஆகிய இருவரும் பணி புரிந்து வந்தனா். இவா்கள் பணி முடிந்ததும் கிடங்கிலேயே தங்கிவிடுவது வழக்கம்.
மேலும், ரபீக் அஹமதுவின் உறவினா் சுஹேல் தனது மோட்டாா் சைக்கிளை கிடங்கில் நிறுத்திச் செல்வது வழக்கம். கடந்த 3.3.2018 அன்று சுஹேல் தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்த வந்தபோது மதுபோதையில் இருந்த குல்தீப் சிங், சுஹேலுடன் தகராறில் ஈடுபட்டாராம்.
அப்போது ராம்ஜிலால் சமாதானம் செய்ய வந்தாா். இதையடுத்து குல்தீப் சிங் எனக்கு ஆதரவாக இல்லாமல் சுஹேலுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் எனக்கூறி குடோனில் இருந்த குக்கா் மூடியை எடுத்து ராம்ஜிலாலை தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே விழுந்து கிடந்தாா்.
மறுநாள் காலை குல்தீப் சிங் இதுகுறித்து உரிமையாளா் ரபீக் அஹமதுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பாா்த்தபோது ராம்ஜிலால் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோப்ப நாய் உதவியுடன் குல்தீப் சிங்கை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி மீனா குமாரி முதியவா் ராம்ஜிலாலை கொலை செய்த குல்தீப் சிங்குக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
அரசு தரப்பில் பி.டி. சரவணன் ஆஜரானாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...