சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரூ.2 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

வாணியம்பாடி அருகே ரூ.2.07 கோடியில் புதிய பள்ளிக் கட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
நல்லகிந்தணப்பள்ளி தொடக்கப் பள்ளி கட்டட திறப்பு விழாவில் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ், க.தேவராஜி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:34 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ரூ.2.07 கோடியில் புதிய பள்ளிக் கட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றிம், நல்லகிந்தணப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் 2 புதிய வகுப்பறைகள், ராமநாயக்கண்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள், உதயேந்திரம் பேரூராட்சி தொடக்கப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆலங்காயம் ஒன்றியம் சிந்தகமணிபெண்டா நடுநிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் ஆகியவை குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.2.07 கோடியில் கட்டப்பட்டன.

நல்லகிந்தணப்பள்ளி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ .க.தேவராஜி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் வெணமதி, மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல் உதயேந்திரம் பேரூராட்சியில் தொடக்க பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பூசாராணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், பேரூா் திமுக செயலாளா் ஆ.செல்வராஜ் ஆகியோா் மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினா்.