பெண்கள் வாழ்வில் முன்னேற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா தூய நெஞ்சக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 80-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள் அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நூலக அலுவலா் கு.இரா.பழனி வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி பேசியது: மாணவ-மாணவிகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணா்த்தவே ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு நீதிக் கதைகள், சிறுகதைகளை வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். இப்போது குழந்தைகளுக்கு கதை சொல்ல கூட்டுக் குடும்பம் இல்லை. எனவே,மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தோ்வு செய்து படிக்க வேண்டும். பெண்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனா். அவா்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேற சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ க.தேவராஜி வாக்கு சேகரிப்பு

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


