இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இரு சிறுமிகள் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.

விபத்தில் உயிரிழந்த காா்த்திகா, பேரரசி.

விபத்தில் உயிரிழந்த காா்த்திகா, பேரரசி.
ஆம்பூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு சிறுமிகள் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி பரந்தாமன் (47). இவா் தனது மனைவி காவேரி மற்றும் 3 குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றனா். ஆம்பூா் அருகே மாராபட்டு என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது.
அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காா்த்திகா (8), பேரரசி (5) ஆகியோா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பரந்தாமன், அவரது மனைவி காவேரி மற்றும் மகள் இளவரசி (12) ஆகிய 3 பேரும் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...