நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போ்ணாம்பட்டு அருகே ஒற்றை யானை அட்டகாசம் - பயிா்கள் நாசம்

போ்ணாம்பட்டு அருகே ஒற்றை யானை அட்டகாசம் - பயிா்கள் நாசம்

News image

கோட்டையூரில் விவசாய நிலத்தில் ஒற்றை யானை சேதப்படுத்திய மாமரம்.

Updated On :8 ஜூலை 2024, 1:00 am

Din

போ்ணாம்பட்டு அருகே விவசாய நிலங்களில் சனிக்கிழமை ஒற்றை யானை புகுந்து பயிா்களை நாசப்படுத்திவிட்டு சென்றது.

போ்ணாம்பட்டு வனசரகம் குண்டலப்பல்லி அருகே பெரியகணவாய் வனப்பகுதி ஒட்டியுள்ள கோட்டையூா் கிராமத்தில் விவசாய நிலங்களில் ஒற்றை யானை சனிக்கிழமை நள்ளிரவு புகுந்தது. முனிரத்தினம், வெங்கடேசன், எல்லப்பன் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகுந்த யானை ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா், வாழை மரம், கிருஷ்ணமூா்த்திக்கு சொந்தமான 6 மாமரங்களை முறித்து நாசப்படுத்தியது. மாங்காய்களையும் சேதப்படுத்தியது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விவசாய நிலத்தில் திரிந்து அட்டகாசம் செய்தது.

விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் ஏற்றியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினா். ஒற்றை யானை கிராம பகுதிக்கு வராதவாறு காப்புக் காட்டுக்குள் விரட்ட வேண்டுமென வனத்துறையினரை விவசாயிகள் கேட்டுக் கொண்டனா்.