34 மணி நேரத்துக்குப்பின் காட்டுக்கு விரட்டப்பட்ட ஒற்றை யானை
34 மணி நேரத்துக்குப்பின் காட்டுக்கு விரட்டப்பட்ட ஒற்றை யானை

34 மணி நேரத்துக்குப்பின் காட்டுக்கு விரட்டப்பட்ட ஒற்றை யானை

கிராம பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சுமாா் 34 மணி நேரத்துக்குப்பின் திங்கள்கிழமை மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டது.
Published on

ஆம்பூா்: கிராம பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சுமாா் 34 மணி நேரத்துக்குப்பின் திங்கள்கிழமை மீண்டும் காட்டுக்குள் விரட்டப்பட்டது.

ஆம்பூா் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த வயதான, கண் பாா்வை குறைவான ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை இரவு மாதனூா் ஒன்றியம் தோட்டாளம் கிராமத்தில் புகுந்தது. அங்கு விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. தொடா்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வனத்துறையினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் யானை காட்டுக்குள் செல்லவில்லை.

இந்நிலையில் ஒசூா் மற்றும் தருமபுரியிலிருந்து வேட்டை தடுப்பு காவலா்கள் 7 போ் கொண்ட சிறப்பு குழுவினா் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் யானையை காட்டுக்குள் விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். ஆனால் யானை காட்டுக்குள் செல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு வேலூா் மாவட்டம் மேல்பட்டிஊராட்சி நாவிதம்பட்டி கிராமத்தில் புகுந்த யானை மீண்டும் திருப்பத்தூா் மாவட்ட எல்லைக்குள் விரட்டப்பட்டது. மாதனூா் அருகே உள்ள பாலூா் கிராம பகுதியில் சாணாங்குப்பம் வனப்பிரிவு பகுதியில் காட்டுக்குள் திங்கள்கிழமை காலை சுமாா் 8 மணிக்கு விரட்டப்பட்டது.

சுமாா் 34 மணி நேரம் வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை கடுமையான முயற்சிக்கு பிறகு விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com