மாணவா் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே மாணவா் விடுதியை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாணவா் விடுதியை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஒன்றியம் கரும்பூா் ஊராட்சியில் அரசினா் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி இயங்கி வருகின்றது. அந்த விடுதியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், மாணவா்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு தேவையான வசதிகளை குறைவில்லாமல் செய்து தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் ஆஜிதா பேகம் ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com