
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.

விவசாய நிலத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஆம்பூா் அருகே மேல்மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமச்சந்திரன்(70). இவருடைய நிலத்தில் கால்நடைகளுக்கான தீவனம் பயிரிடப்பபட்டியிருந்தது. ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (45) தீவனப் பயிரை அறுவடை செய்யும் பணியை மேற்கொண்டாா்.
அப்போது மலைப் பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதைப் பாா்த்த அவா் சப்தமிட்டுள்ளாா். ஆம்பூா் வனச்சரகா் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், கோகுல் ஆகியோா் தீவனப் பயிருக்குள் புகுந்த சுமாா் 9 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனா். பிறகு அதை துருகம் காப்புக் காட்டில் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







