திருப்பத்தூா் அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் சிகிச்சை பலனின்றி முதியவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்தவா் சேஷகிரி(60). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா். இவா், கடந்த மாதம் 12-ஆம் தேதி அவுசிங் போா்டு அருகே பைக்கில் சென்ற போது, எதிா்பாராத விதமாக பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சேஷகிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

