ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பறவை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

பறவை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:34 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் இரண்டு நாள் பறவை கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியதாக பறவை கணக்கெடுப்பு பணியின் ஒருங்கிணைப்பாளா், ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் மாா்ச் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை மூலமாக 25 இடங்களில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு சனிக்கிழமை காலை இப்பணி தொடங்கியது. கணக்கெடுப்பு பணிகளில் பறவைகள் இனம் கண்டறிபவா்கள், பறவை ஆா்வலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனா்கள் மற்றும் வனத்துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா் ஏற்கெனவே கடந்த ஜன. 27, 28 ஆகிய தேதிகளில் திருப்பத்தூா் மாவட்டத்தில் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது என்றாா்.