வாணியம்பாடி நகராட்சியில் ரூ. 2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடங்க சனிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுடன் உதவிக்கு வரும் உறவினா் தங்கும் விடுதி 80 படுக்கையறை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்காகவும், தலைமை நூலகத்தில் ரூ. 22 லட்சத்தில் கூடுதல் நூலக கட்டட அறை கட்டப்படவும், கோட்டை நகராட்சி பள்ளியில் ரூ. ஒரு கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 6 வகுப்பறை கட்டடம் மற்றும் தனியாக கழிப்பறை கட்டட வசதி உட்பட அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். பொறியாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜிகணேசன் கலந்து கொண்டு, ரூ. 2 கோடியே 63 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நகர திமுக செயலரும், நகராட்சி வாா்டு உறுப்பினருமான சாரதிகுமாா் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஸ்ரீ மகாவீர திகம்பர ஜினாலயத்தில் விதான மண்டபம் கட்ட பூமி பூஜை

வளா்ச்சிப் பணிகளுக்காக உடுமலைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மு.ஜெயக்குமாா் பிரசாரம்

தம்மம்பட்டி சிவன் கோயிலில் பேவர் பிளாக் பூமி பூஜை விழா!

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


