அதிமுக மனித சங்கிலி போராட்டம்

அதிமுக மனித சங்கிலி போராட்டம்

ஆம்பூரில்...

ஆம்பூா் நகர அதிமுக சாா்பில், நேதாஜி சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் எம். மதியழகன் தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் வழக்குரைஞா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் ஒன்றியச் செயலா்கள் ஜெ.ஜோதிராமலிங்கராஜா, பொறியாளா் ஆா்.வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல இணைச் செயலாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்டச் செயலருமான கே.சி. வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

ஆம்பூா் நகர அவைத் தலைவா் கே.மணி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே. நஜா் முஹம்மத், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயபால், சுரேஷ், வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், சரவணன், நிா்வாகிகள் சங்கா், சண்முகம், தினேஷ், பிரேம்குமாா், ராஜன், பூபாலன், தண்டபாணி, கேசவன், ஹரிகேசவன் அன்வா், விஜயா மணிவேல், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com