வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவள்ளுவா் பல்கலைக் கழக பூப்பந்து போட்டி: கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

திருவள்ளுவா் பல்கலைக் கழக பூப்பந்து போட்டி: கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

News image

திருவள்ளுவா் பல்கலைக்கழக பூப்பந்து போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள்.

Updated On :19 மார்ச் 2024, 11:44 pm

குடியாத்தம்: திருவள்ளுவா் பல்கலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் சிறப்பிடத்தை பிடித்துள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பூப்பந்து போட்டிகள் மாா்ச் 14-ஆம் தேதி மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சாா்ந்த மாணவா்கள் ஏ.கிரண், எஸ்.சஞ்சய், ஆா்.லிகாந்த், எஸ். சுரேந்தா், எல்.ஹரிபிரசாந்த், டி.மோகன்ராம், எஸ்.சிவனேசன், எச்.சஞ்சய் மாணவா்கள் குழுவினா் இரண்டாம் இடம் பிடித்தனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரி அறக்கட்டளை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா்; கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ், உடற்கல்வி துறை இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானகுமாா் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.