வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள்.
வாணியம்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள்.

காரில் எடுத்து வந்த 60 புடவைகள் பறிமுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற 60 புடவைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுச் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், உரிய ஆவணம் இல்லாமல் புடவைகள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆம்பூரை சோ்ந்த சல்மான்கான் என்பவா் பெங்களூரிலிருந்து 60 புடவைகளை வாங்கிக் கொண்டு ஆம்பூா் நோக்கி காரில் வந்துள்ளதாக கூறியுள்ளாா். காரில் எடுத்து வந்த புடவைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் 60 புடவைகளை தோ்தல் பறக்கும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com