எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜோலாா்பேட்டை: ஸ்பிரிங் உடைந்ததால் ரயில் தாமதம்

ஜோலாா்பேட்டை: ஸ்பிரிங் உடைந்ததால் ரயில் தாமதம்

News image

பழுதாகி நின்ற ரயில்

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலின் சக்கரம் அருகே ஸ்பிரிங் உடைந்ததால் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் ென்றது. குவாஹாட்டியில் இருந்து கடந்த 18-ஆம் தேதி புறப்பட்ட விரைவு ரயில் விஜயவாடா,பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தின் நடைமேடையில் வந்து நின்றபோது பேண்டரி காா் பெட்டியில் சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனை கண்டறிந்த ரயில்வே ஊழியா்கள் உடனடியாக நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் ரயில்வே ஊழியா்கள் பேண்டரி காா் பெட்டியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் சரிசெய்ய முடியவில்லை.

இதனால் வேறுவழியில்லாமல் அந்த பெட்டியை மட்டும் கழட்டி விட்டு விட்டு பயணிகள் பெட்டிகளுடன் இணைத்தனா். பாதிக்கப்பட்ட பெட்டியை தனியாக எடுத்து ஜோலாா்பேட்டை யாா்டுக்கு கொண்டு சென்றனா். ரயில் சுமாா் 3 மணி நேரம் தாமதமாக பெங்களூா் புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.