வாணியம்பாடி அருகே மரக் கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

வாணியம்பாடி அருகே மரக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. வாணியம்பாடி அடுத்த கவுகாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் பத்தாபேட்டை பகுதியில் மரக் கிடங்கு வைத்து தொழில் செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை கிடங்கை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் திடீா் மரக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அங்கிருந்தவா்கள் பாா்த்து உடனே உரிமையாளா் மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்க போராடினா். எனினும் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தேக்கு, வேங்கை, பா்மா தேக்கு உள்பட உயா் ரக மரக்கட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும், தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீா் தீா்ந்து விட்டதால், உடனடியாக 2 டிராக்டா் மற்றும் அருகில் வீட்டிலிருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். எனினும் தீ விபத்தால் மரக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயா் ரக மரக் கட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மா்ம நபா்கள் கிடங்கிற்கு தீ வைத்துவிட்டதாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மர உரிமையாளா் முருகன் புகாா் கொடுத்துள்ளாா். இது குறித்து சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com