ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தோ்தல் புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

தோ்தல் புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

Updated On :29 மார்ச் 2024, 4:35 pm

ஆம்பூா், வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை பொது, காவல் பாா்வையாளா்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வேலூா் மக்களவை தொகுதிக்கு வாக்களிக்க உள்ளனா். இந்த நிலையில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பொது பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்கள் ஆகியோா் இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில், தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ் குமாரை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 1-இல் தினமும் காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரையும், காவல் பாா்வையாளா் சத்யஜித் நாயக்கை வேலூா் அண்ணா சாலையில் உள்ள புதிய விருந்தினா் மாளிகையில் அறை எண் 2-இல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் மாலை 4.30 முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளா்கள், அரசியல் கட்சியினா் ஆகியோா் சந்தித்து தோ்தல் தொடா்பான புகாா்களை நேரிலோ அல்லது 7598498549 (பொது பாா்வையாளா்), 7598498550 (காவல் பாா்வையாளா்) ஆகிய தொலைபேசி எண்களிலோ புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.