தென்னை மரம் முறிந்து விழுந்ததால் மின் தடை

தென்னை மரம் முறிந்து விழுந்ததால் மின் தடை

மாதனூா் அருகே சூறாவளிக் காற்றால் தென்னை மரம் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

மாதனூா் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக தோட்டாளம் கிராமத்தில் தென்னை மரம் முறிந்து மின்சார கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மின் தடையால் கடும் அவதிக்கு உள்ளானாா்கள். சம்பவ இடத்திற்கு ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், மின்வாரிய ஊழியா்கள் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனா். சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

இதேபோல், ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சூறாவளிக் காற்று வீசியதால் மின் தடை ஏற்பட்டது. சுமாா் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com