3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கு: மேலும் ஒருவா் கைதுஒர

News image
Updated On :3 மே 2024, 5:21 pm

Din

வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி ராமகிருஷ்ணா் தெரு சமையகாரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் சரவணன்(42). கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு சரவணன் வீட்டின் மீது முன் விரோதம் காரணமாக மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் மகன் சக்திவேல் (18) என்பவரை வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.