உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா்,எஸ்.பி. ஆய்வு

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா்,எஸ்.பி. ஆய்வு

News image

திருப்பத்தூா் கிளைச்சிறையில் ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்

Updated On :4 மே 2024, 4:05 pm

Din

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கிளைச் சிறை செயல்பட்டு வருகிறது.

இங்கு சனிக்கிழமை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரடியாகச் சென்று சிறையில் குடிநீா்,உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கிளைச் சிறைக்கு கூடுதலாக குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிக்கு அறிவுறுத்தினாா். மேலும் உணவு கிடங்கில் இருப்பில் உள்ள உணவுப் பொருள்கள், குற்றவாளிகள் தங்கும் அறை மற்றும் சமையல் அறையில் உணவு தயாரிக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபா் கழக முதுநிலை மண்டல மேலாளா் பிரபாகரன், வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன், நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், அரசு அதிகாரிகள் உள்பட பலா் உடன் இருந்தனா்.